2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் DCSL நிறுவனமானது தனது மதுபானங்களில் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் 90 ரூபாயாலும், 375 மில்லிலீற்றர் மதுபான போத்தல் 50 ரூபாயாலும் மற்றும் 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல் 20 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் வாட் வரி அதிகரிப்பிற்கு அமைவாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக DCSL நிறுவனம் தெரிவித்துள்ளது.