அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் அலட்சியம் தொடர்பாக வருடத்திற்கு சுமார் 600 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் இதே போன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயாளர்களுக்கு சுகாதார பிரிவு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்ற போதிலும் சில பிரச்சனைகள் எழுவதாகவும் அவற்றை குறைப்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.