VAT வரி தொடர்பில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
VAT வரிக்கு தொடர்பில்லாத அரக்கனை உருவாக்கி மக்களைத் தூண்டி விடுபவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, VAT திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, VAT திருத்தம் தொடர்பில் மக்கள் சரியான புரிதலை கொண்டிருப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.