இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தேடியறிவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த எதிர்பார்த்திருக்கும் அதேநேரம், புதிய கிரிக்கெட் சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.