Friday, November 22, 2024
Google search engine
Homeஉலகம்அமெரிக்க-கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழப்பு

அமெரிக்க-கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலம் உள்ளது. ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் நான்கு எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும். மற்றவை லூயிஸ்டன், வேர்ல்பூல் மற்றும் பீஸ் பிரிட்ஜ் ஆகும்.

இந்நிலையில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்க-கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலத்தின் எல்லையில் ஒரு வாகனம் வெடித்த சம்பவம் ‘பயங்கரவாத தாக்குதல்’ முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் FBI விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் “நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர்” என்று நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments