யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கடற்தொழிலாளர்களின் களஞ்சிய சாலையில், இன்று (02) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மலையகம், உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் (வயது 46) மற்றும் வேலாயுதம் ரவி (வயது 38) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை முனை பகுதியில் கடற்தொழில் உபகரணங்கள் வைக்கப்பட்டு இருந்த களஞ்சிய சாலையில் இருவரும் உறங்கி கொண்டிருந்த வேளை தீ விபத்து ஏற்பட்டு இருவரும் , உறக்கத்திலையே தீயில் எரிந்து உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் , சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.