2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும நலன்புரி உதவித் திட்ட விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “அஸ்வெசும திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.இதுவரை எங்களால் 1,410,000 பேருக்கு பணம் செலுத்த முடிந்துள்ளது.
எதிர்காலத்தில், அதில் காணப்படும் பலவீனங்களை தவிர்த்து, ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அஸ்வெசுமவிற்காக விண்ணப்பங்களை கோர எதிர்ப்பார்த்துள்ளோம்.
இதன்போது ஒருபுறம் பொருளாதாரம் மீண்டு வரும். மேலும், சீர்திருத்த செயல்பாட்டினுள் பாதிக்கப்படும் மக்கள் குழு உள்ளது. குறுகிய காலத்தில். அவர்களை பாதுகாக்கும் வகையில் அஸ்வெசும செயற்படுத்தப்படுகிறது” என்றார்