தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 14-ம் தேதி போகி பண்டிகை, 16-ம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வது வழக்கம்.
அதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து, வரும் 8-ம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவ சங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில் அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இந்த ஆலோசனை முடிவடைந்த பின்னர் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.