ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுவிட்டு பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை (04) போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் பஸ்ஸில் ஏற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.