புத்தாண்டு காலத்தில் நாட்டில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு, ஒரு கிலோ கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இரண்டாயிரம் ரூபாயை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பெய்த கடும் மழையால் பயிர்கள் அழிந்து வருவதே இந்த விலை உயர்விற்கு காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர்.