கட்டுமானப் பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளதாக கட்டடத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மணல், சீமெந்து, இரும்புக் கம்பி, மின்சாதனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் எம். டி பால் தெரிவித்துள்ளார்.
ஒரு கியூப் மணல் 1500 ரூபாவினாலும், சீமெந்து மூட்டை ஒன்று 300 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.