அமெரிக்காவில் இருந்து கனடா – Ontario இற்கு புறப்பட்ட அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737-9 மேக்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் கதவுகளில் ஒன்று நடுவானில் திறக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைத்தனர்.
பயணிகளால் எடுக்கப்பட்ட காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பகிர்ந்த காணொளிகளில் , விமானத்தில் இருந்து மிட் கேபின் வெளியேறும் கதவு முற்றிலும் பிரிந்திருப்பதைக் காட்டுகிறது.
“AS1282 போர்ட்லேண்டில் இருந்து ஒன்டாரியோவிற்கு இன்று மாலை ஒரு சம்பவத்தை சந்தித்தது. இந்த சம்பவம் தொடர்பில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானம் 171 விருந்தினர்கள் மற்றும் 6 பணியாளர்களுடன் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக கூறியுள்ளது.