பணிக்கு வராமல், சட்டவிரோதமாக போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஊழியர்களின் சேவையை இடைநிறுத்த, தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
ஊழியர்கள் குறித்த தகவல்களை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை 6 பிரிவுகளாக பிரிப்பது தொடர்பிலான உத்தேச சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக சில ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக, மின்சார சபையின் பொதுச் சேவைகள் அலுவலகங்களின் ஜன்னல்கள் மூடப்பட்டு இருந்தமை தொடர்பில் அமைச்சுக்களுக்கு பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.