நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை புதைகுழியில் இருந்து மீண்டும் தோண்டி எடுத்து, சடலத்தின் ஆடைகள் அத்தனையையும் கழற்றி நிர்வாணமாக்கி விட்டுச் சென்றுள்ள சம்பவம் பண்டாரவளையில் இடமபெற்றுள்ளது.
பண்டாரவளை பதுலுகஸ்தான பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா மதுஷானி என்ற 24 வயதுடைய யுவதி கடந்த புதன்கிழமை (03) உயிரிழந்துள்ளார். மதச் சடங்குகளுக்கு பின் சடலம் மறுநாள் (04) புதைக்கப்பட்டது.
அந்த யுவதிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (7) பிறந்த நாளாகும். இந்நிலையில், அந்த யுவதியின் தந்தை கல்லறைக்குச் சென்றுள்ளார். அப்போது தனது மகளின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு ஆடைகள் இன்றி நிர்வாணமாக விடப்பட்டதை கண்டுள்ளார்.
இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.