காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் 19 கண் மதகில், 10-வது செட்டர் வழியாக 25 கனஅடி உபரிநீர் நேற்று மாலை திறந்து விடப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 21.93 அடியும், மொத்த கொள்ளளவு 3,102 மில்லியன் கனஅடி, நீர்வரத்து 36 கனஅடியாக உள்ளது. மழையின் தாக்கம் அதிகரித்தால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்கவும் எதிர்பார்த்தபடி மழை இல்லையென்றால் உபரிநீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.