ஈழத் தமிழருக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று சொகுசுமனைகள் விற்பனை செய்வதாகக் கூறி சட்டவிரோதமாக ஐந்து மில்லியன் டொலர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் அடிப்படையில் வீட்டுமனைகளை நிர்மானிப்பதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கு உரிய அனுமதி இல்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ஓன்டாரியோ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றவாளியாகக் காணப்பட்ட அந்த ஈழத் தமிழருக்குச் சொந்தமான நிறுவனம், கனடா வீட்டு நிர்மான அதிகாரசபைக்கு (Home Construction Regulatory Authority (HCRA) 180,000 டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட 5 மில்லியன் டொலர்கள் பணத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பத்தளித்துள்ளது. அத்தோடு 34,000 டொலர்ஸ் தண்டப் பணம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.