Tuesday, December 24, 2024
Google search engine
Homeசினிமாஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்

ஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான ‘கஹோ நா… பியார் ஹை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதிலும் இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. தன் ஒவ்வொரு படத்திலும் தன் நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி தன் திறமையால் தனக்கான மையில்கல்லை எட்டியுள்ள நடிகர் ஹிருத்திக் ரோஷன் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ரசிகர்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார்கள். அதுமட்டுமல்லாமல் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி உணவு பரிமாறி கொண்டினார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments