மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி இன்று (12) காலை 9.30 மணி அளவில் தரையிறங்கச் செல்லும் போது ஏற்பட்ட மோசமான தூசி நிறைந்த காலநிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
MI 17 ரக ஹெலிகாப்டரில் 5 விமானப்படை வீரர்கள் பயணித்ததாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
விமானப்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.