மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை என எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்திற்கே நிதி அதிகாரம் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகின்றார். ஆனால் நாடு வங்குரோத்தடைந்துள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் ஒருபோதும் இந்த நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த விடயத்தை அவர் மூடி மறைத்தார்.
2022ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது கையிருப்பு எவ்வளவு இருக்கின்றது என்று கேட்டேன். 20 மில்லியன் டொலர்கள் இருப்பதாக கூறினார். அப்போதே நாடு வங்குரோத்தடைந்துள்ளது என்பதனை அறிந்துகொண்டோம். எனவே அவ்வாறான மத்தியவங்கி ஆளுநர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை” எனத் தெரிவித்தார்.