மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பிங்டிங்ஷான் நகரில் உள்ள நிலக்கரிச்சுரங்கம் ஒன்றில் விபத்து ஏற்பட்டுள்ளது. நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்தபோது மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அவர்களில் 380 பேர் அப்போதே சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள 45 பேரில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
காணாமல் போன 8 பேரை மீட்க மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலக்கரி சுரங்கத்திற்கு பொறுப்பானவர்கள் பொது பாதுகாப்பு அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.