Monday, December 23, 2024
Google search engine
Homeவிளையாட்டுஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டி; முதல் வீரராக உலக சாதனை படைக்க உள்ள ரோகித்...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டி; முதல் வீரராக உலக சாதனை படைக்க உள்ள ரோகித் சர்மா

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை இந்தூரில் நடைபெற உள்ளது.

நாளை நடைபெற உள்ள ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா களம் இறங்கும் பட்சத்தில் புதிய உலக சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

அதாவது, ரோகித் சர்மா இதுவரை 149 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது போட்டியில் ரோகித் களமிறங்கும்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலகிலேயே 150 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார்.

அவருக்கு அடுத்த இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் (134 ஆட்டம்), அயர்லாந்தின் டாக்ரெல் (128 ஆட்டம்), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (124 ஆட்டம்), நியூசிலாந்தின் மார்டின் கப்தில் (122 ஆட்டம்) உள்ளனர்.

இந்திய வீரர்களில் ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக விராட் கோலி (115 ஆட்டம்), தோனி (98 ஆட்டம்), ஹர்திக் பாண்ட்யா (92 ஆட்டம்), புவனேஷ்வர் குமார் (87 ஆட்டம்) உள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments