Monday, December 23, 2024
Google search engine
Homeவிளையாட்டுஆசிய கோப்பை கால்பந்து : இந்தியா - உஸ்பெகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை...!

ஆசிய கோப்பை கால்பந்து : இந்தியா – உஸ்பெகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை…!

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசியன் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெறும்.

இதில் இந்தியா ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments