மஸ்கெலிய நல்லத்தண்ணி நகரில் 11,500 ரூபாய் மதிப்புள்ள போலி நாணயத் தாள்களை வைத்திருந்த வாடகை வான் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
வலஸ்மூலையைச் சேர்ந்த 45 வயதுடைய வான் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருளை ஏற்றிக்கொண்டு சிவனொளிபாத மலைக்கு வந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த போலி நாணயத்தாள்கள் சிக்கின. அதனை வைத்திருந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீர்சேகர தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் வலஸ்முல்ல பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரீகர்கள் குழுவுடன் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.