நாட்டில் விசா முறையை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பல அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.