கனடாவில் வீட்டிலிருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்தனர்.
கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வீட்டிலிருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை 20 வீதமாக குறைவடைந்துள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. பெருந்தொற்று நிலைமைக்கு முன்னதாக நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்தோரின் எண்ணிக்கை வெறும் ஏழு சதவீதம் என தெரிவிக்கப்படுகின்றது.
இக் காலப் பகுதியில் போக்குவரத்து பாரியளவில் சரிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் போக்குவரத்து செலவுகளை குறைக்க முடியும் சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.