கனடாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கனடாவின், ரிச்மன்ட்ஹில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 33 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இது தொடர்பில் 36 வயதான மொஹமட் எல் ஸாவாய், 23 வயதான கொரி சூங் ஆகியோருக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏழு பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனால் குறித்த இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தொடரப்பட்டிருந்த நபர் ஒருவர் தடுப்புக் காவலில் இருந்த பொழுதே உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.