Monday, December 23, 2024
Google search engine
Homeஇலங்கைதமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கையர்களுக்கு சர்வதேச கடவுச்சீட்டு

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கையர்களுக்கு சர்வதேச கடவுச்சீட்டு

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில்  அகதிகளாக வாழ்ந்து வரும்  இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச கடவுச்சீட்டு நேற்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  தெரிவிக்கையில்,  “வடக்கு கிழக்கைச் சேர்ந்த இலங்கையர்கள்  கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் பாஸ்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுசென்ற போது, அவரது வழிகாட்டுதலின் கீழ், இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும்வகையில் இலங்கை அரசின் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டுகள்  வழங்கி வைக்கப்பட்டன.

உலகில் வேறெங்கிலும் இதற்கு முன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

மேலும் இந்திய அகதி முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குமாறு இரண்டுமுறை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சர் அமத்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் அவ்விடயம் தொடர்பான வேலைத் திட்டங்களுக்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இந்த தருணத்தில் 40 வருடங்களாக தாய் நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு அடைக்கலம் வழங்க உதவிய இந்திய அரசிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக முதல்வருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும்  நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments