அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு திட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், உள்ளிட்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது. சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.