மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் ஆற்றுப் பகுதியில் வைத்து இன்று (21) இடம்பெற்றுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் நிற்பதைக் கண்டு நிறுத்துவார்கள் என்ற பயத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டமாவடி ஆற்றில் விழுந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.