கனேடிய மக்கள், மாதாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஆய்வு நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் வெளிவந்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரியில்லா சேமிப்பு கணக்குகளுக்கு கனடியர்களின் பங்களிப்பு குறைவடைந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
கனடியர்களின் மாதாந்த அடிப்படைச் செலவு 397 டொலர்களினால் அதிகரித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமகளின் அடிப்படையில் கனடியர்களில் பலர் நிதி நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆடைகள் மற்றும், பயணங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக செலவிடும் தொகையை மக்கள் குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.