இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது.
வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் 184 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் ஒருவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.