அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் சேவை உள்ளது. இந்த ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் நேற்று இரவு நோயாளி சிகிச்சைக்காக வெதர்போர்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு ஹெலிகாப்டர் தளத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.