இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று விளக்கேற்றி வணக்கம் செலுத்தினார்.
“ஈழத் தமிழர்களின் அரசியல் உரித்துக்கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக எனக்குரித்தாக்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து, கொள்கை ரீதியில் ஒருமித்திருப்போரை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ள பலம் மிக்க பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து இன்று ஆரம்பித்தோம்” என்று சிறிதரன் இதன்போது தெரிவித்தார்.