Monday, December 23, 2024
Google search engine
Homeசினிமாராமர் சிலை பிரதிஷ்டை விழா- பார்வதியின் பதிவால் குவியும் பாராட்டு

ராமர் சிலை பிரதிஷ்டை விழா- பார்வதியின் பதிவால் குவியும் பாராட்டு

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீக்ஸிட், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், விக்கி கவுசல் மற்றும் கத்ரீனா கைஃப், கங்கனா ரனாவத், சச்சின் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர். ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை பார்வதி தனது சமூக வலைதளத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ‘1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தில் இறையாண்மை , சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு நாடாக இந்தியா எப்போதும் இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments