இங்கிலாந்திலிருந்து கனடா நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லண்டனிலிருந்து ரொறன்ரோ நோக்கி ஏர் கனடா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் மீது பறந்துகொண்டிருந்த போது, திடீரென எழுந்த ஒரு பயணி விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறக்க முயன்றுள்ளார்.
உடனடியாக விமானப் பணியாளர்கள் அவரைப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
மனக்குழப்பத்தில் இருந்த அந்த முதியவர், வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை என்றே தோன்றுவதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன், அவர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.