கனடாவின், வின்னிபெக்கில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென் பொலிபஸ் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருந்த நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஐந்து மணித்தியாலங்கள் குறித்த நோயாளி சிகிச்சைக்காக காத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மரணத்திற்கான காரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த நபரின் மரணம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளது.
கனடாவில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக காத்திருந்து மரணிக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.