கனடாவில் சிறிய பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு சிறிய பயணிகள் விமானம் புறப்பட்டது.
இந்நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்துடனான தொடர்பு துண்டானது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மீட்புக்குழுவினர் பாராசூட் மூலம் சென்று தேடினர். அப்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இந்த விமான விபத்தில் 6 பேர் பலியானதுடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில் விபத்து குறித்து விசாரணை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஒரு குழுவை நியமித்துள்ளது.