நிகழ்நிலை காப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் குழு நிலை விவாதத்தின் போது திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (24) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இன்று (24) பிற்பகல் நாடாளுமன்றத்தில் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தன. இதன்படி, நிகழ்நிலை காப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.