நாட்டில் 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இயற்பியல், உயிரியல், கணிதம், வேதியியல், தொழில்நுட்பம் மற்றும் விசேட மொழிகளுக்கு புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.