Sunday, December 22, 2024
Google search engine
Homeவிளையாட்டுகேலோ இந்தியா விளையாட்டில் பதக்கங்களை குவிக்கும் தமிழ்நாடு

கேலோ இந்தியா விளையாட்டில் பதக்கங்களை குவிக்கும் தமிழ்நாடு

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் நேற்றைய போட்டியில் தமிழ்நாடு ஒரே நாளில் 6 தங்க பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது.

இந்த நிலையில் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு மேலும் 2 பதக்கம் உறுதியாகியுள்ளது. இதில் ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மேலும் கோவையில் நடைபெற்று வரும் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. நவீன் குமார், கபிலன், துர்காஸ்ரீ, ஜீவா ஆகியோர் தோற்றனர். அரை இறுதியில் தோற்றதால் தமிழகத்துக்கு 4 வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.

ஆனால் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் மராட்டியமும், இரண்டாவது இடத்தில் அரியானாவும் உள்ளன. தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது.

 

 

Previous articleஇங்கி. எதிரான முதல் டெஸ்ட்: உள்நாட்டில் ஆதிக்கம் நீடிக்குமா? ரோகித் சர்மா பதில்
Next article6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் நேற்றைய போட்டியில் தமிழ்நாடு ஒரே நாளில் 6 தங்க பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. இந்த நிலையில் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு மேலும் 2 பதக்கம் உறுதியாகியுள்ளது. இதில் ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் கோவையில் நடைபெற்று வரும் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. நவீன் குமார், கபிலன், துர்காஸ்ரீ, ஜீவா ஆகியோர் தோற்றனர். அரை இறுதியில் தோற்றதால் தமிழகத்துக்கு 4 வெண்கலப் பதக்கம் கிடைக்கும். ஆனால் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் மராட்டியமும், இரண்டாவது இடத்தில் அரியானாவும் உள்ளன. தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments