நச்சுப் போதை மருந்து காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 2023ம் ஆண்டில் மாகாணத்தில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பேர் நச்சு போதை மருந்து வகைகள் பயன்பாட்டினால் உயிரிழந்துள்ளனர்.
நாளொன்றுக்கு சராசரியாக ஏழு பேர் என்ற அடிப்படையில் மரணங்கள் பதிவாகியுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரதம மரண விசாரணையாளர் லிசா லாபொயின்ட் இது பற்றிய தகவல்களை ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
நச்சுப் போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் விழிபுணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் நச்சு போதை மருந்து பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.