கனடாவில் வட்டி வீதத்தில் மாற்றமில்லை என கனடிய மத்திய வங்கி அறிவித்துள்ளது. வங்கி வட்டி வீதம் தொடர்ந்தும் ஐந்து வீதமாக பேணப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
விலை ஸ்திரத்தன்மையை பேணும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி வேகம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வட்டி வீதம் மாற்றமின்றி பேணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால் வட்டி வீதங்கள் உயர்த்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் ரிப் மெக்கலம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.