கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையம் வந்தடைந்த பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது.
பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்களும், திரை பிரபலங்களும் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர்கள் ராமராஜன், சிவகுமார், விஜய் ஆண்டனி, ஆனந்த்ராஜ், ஸ்ரீகாந்த், இயக்குனர் வெற்றிமாறன், கேயார் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் விஷால், கார்த்திக் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.