புத்தளம் – ஆனமடுவ பகுதியில் உள்ள பிரபல குத்தகை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும், கடன் வழங்கல் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் கஞ்சாவுடன் நுரைச்சோலை இளந்தையடி பகுதியில் வைத்து நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், காரில் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற போது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
40 வயதான ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் காரின் சாரதி ஆசனத்திலும் மற்றைய முன் இருக்கைகளிலும் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கொண்டு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.