கனடாவின் முன்னாள் நீதி அமைச்சர் டேவிட் லமாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
லிபரல் அரசாங்கத்தில் லமாட்டி நீதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார். எமார்ட் வெர்டுன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக லமாட்டி தெரிவித்துள்ளார்.
அரசியலிலிருந்து விடைபெற்றுக்கொண்டு தனியார் சட்ட நிறுவனமொன்றில் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டில் முதன் முறையாக லமாட்டி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.
அதன் பின்னர் 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டியிருந்தார். பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அரசாங்கத்தில் லமாட்டி நீதி அமைச்சராகவும் சட்ட மா அதிபராகவும் கடமையாற்றியிருந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தின் போது லமாட்டிக்கு, அமைச்சுப் பொறுப்பு எதனையும் பிரதமர் ட்ரூடோ வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.