இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 3 மாதங்களாக தொடர்கிறது. தற்போது காசாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் தரைப்படை வேகமாக முன்னேறி வருகிறது. இந்த நிலையில் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள அல்-அமல் ஆஸ்பத்திரி மீது இஸ்ரேல் தரைப்படை தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் பீரங்கிகள் ஆஸ்பத்திரியை சுற்றி வளைத்ததாகவும், வீரர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலர் படுகாயம் அடைந்ததாக பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.