ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட ரஷ்ய சுற்றுலா பயணியான பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சுற்றுலாப் பயணி 25 வயதான ரஷ்ய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயில் சென்றுகொண்டிருந்த போது சுற்றுலா பயணி செல்ஃபி எடுக்க முற்பட்ட போது எல்ல பகுதியில் தவறி விழுந்துள்ளார். அவர் தெமோதர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு நாள் விஜயமாக ஹிக்கடுவையிலிருந்து எல்ல பகுதிக்கு பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.