இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்விற்கான ஒத்திகை தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சுதந்திர தின ஒத்திகைகள் ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பொன்றில், எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை காலி முகத்திடலில் சுதந்திர தின ஒத்திகைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காலி வீதியின் சில பகுதிகள் குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான பகுதியும், செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலான பகுதியும், பல கட்டங்களின் கீழ் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.
குறித்த பகுதிகள் அந்தக் காலப்பகுதியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் முற்பகல் 11 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.