தனது மனைவியைத் தாக்கி தீயிட்டுக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய மேல் நீதிமன்றம் மேற்படி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தனது மனைவியைத் தாக்கி அறையொன்றில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொழுத்தி கொலை செய்த சம்வம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.