கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் 500 கோடி ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (28) கஹட்டகஸ்திகிலிய பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி 500 கோடி ரூபாவை மோசடி செய்த இவர்கள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
2021 ஆம் ஆண்டு கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் “ட்ரெட்வின் ஷேர்” என்ற பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி பணத்தை மோசடி செய்துள்ளனர்.